2 டோஸ் செலுத்தியாச்சா... அப்போ இந்த சலுகை உங்களுக்குத்தான் - தெற்கு ரயில்வே அறிவிப்பு!
சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இதனையடுத்து, மின்சார ரயிலில் அத்தியாவசிய பணியாளர்கள், பெண்கள், 12 வயது உட்பட்டோர் அனுமதிக்கப்பட்டனர்.
ஆண் பயணிகள் மட்டும் காலை 7.30 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7.30 மணி வரையும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெற்கு ரயில்வே கட்டுப்பாடு விதித்திருந்தது.
இந்நிலையில், ஆண் பயணிகளும் அனைத்து நேரமும் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை காண்பிக்க வேண்டியது கட்டாயம் என தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தெற்கு ரயில்வே ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்தியவர்களுக்கு மின்சார ரயில்களில் நேரக் கட்டுப்பாடின்றி பயணம் செய்யலாம் என்றும், 2 டோஸ் செலுத்தியவர்கள் ரிட்டர்ன், சீசன் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. தளர்வுகள் உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.