நெடுநேரமாகியும் ஆர்டர் செய்த உணவு வரததால் ஓட்டல் உரிமையாளர் சுட்டுக்கொலை - 3 டெலிவரி பாய் கைது
டெல்லியில் ஆன்லைன் உணவை டெலிவரி செய்வதில் ஏற்பட்ட சண்டையில், உணவக உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிரேட்டர் நொய்டாவின் மித்ரா சொடைட்டி பகுதியில் ‘ஜம் ஜம்’ என்ற பெயரில் ஆன்லைன் டெலிவரி உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த உணவகத்தில் ஆர்டர் செய்யப்பட்ட உணவை டெலிவரி செய்வதற்காக வாங்கிச் செல்ல, டெலிவரி பாய் ஒருவர் காத்திருந்தார். ஆனால், மிக நீண்ட நேரமாகியும் உணவு பார்சல் வரவில்லை. இதனால், டெலிவரி பாய், உணவக பணியாளர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது, உணவகத்தின் உரிமையாளர் சுனில் தலையிட்டார். இதனால் உணவகத்தின் உரிமையாளருக்கும், டெலிவரிபாய்க்கும் இடையே வாக்குவாதம் முட்டியது. இதனால் கோபமடைந்த டெலிவரி பாய் உரிமையாளர் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினார்கள்.
இதில், காயமடைந்த உரிமையாளரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக, அவரை பரிசோதனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.