இனி ‘அந்த மாதிரி படம் பார்க்க முடியாதாம்’ - இந்தியாவில் VPN சேவைக்கு தடை!
இந்தியாவில் தற்பொழுது அதிகளவில் இணையதளம் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை நல்லது என்றாலும், ஆனால், ஆன்லைன் மூலம் குறுக்கு புத்தி கொண்ட சிலர் மக்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நேரடியாக மக்களை ஏமாற்றி பணம் பறிப்பதைக் காட்டிலும் இதுபோன்று திரைமறைவில் இருந்துகொண்டு பணத்தை பறிப்பது மிக எளிதாக உள்ளது. பண மோசடி மட்டுமில்லாமல் குழந்தைகள், பெண்களின் ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றவும் செய்கிறார்கள்.
தடை செய்யப்பட்ட ஆபாச இணையதளங்களும் நுழைந்து வீடியோக்களைப் பார்க்கிறார்கள். தரவிறக்கவும் செய்து ஷேர் செய்து வருகிறார்கள். அதேபோல தடை செய்யப்பட்ட வீடியோ கேம்களையும் தரவிறக்கி செய்யும் விளையாடி காசு பார்க்கிறார்கள். ஒரு சிலர் காசை இழக்கிறார்கள்.
இவையனைத்திற்கும் VPN எனப்படும் Virtual Private Network மூலக்காரணியாக இருக்கிறது. சைபர் குற்றவாளிகள் தங்களை அடையாளம் தெரியாதவர்களாகக் காட்டிக்கொள்ள இந்த விபிஎன் சேவை பேருதவியாக இருக்கிறது. குற்றவாளிகள் இணையதளத்தில் என்ன தேடுகிறீர்கள், அவர்கள் செல்லும் வெப்சைட்கள் என அனைத்தையும் இது மறைத்து விடும்.
அதாவது விபிஎன் ஆக்டிவேட் செய்துவிட்டால் ஐபி முகவரி மாறிவிடும். இதனால் அவர்கள் தமிழ்நாட்டில் இருந்தாலும் விபிஎன் மூலம் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இருப்பது போன்று காட்டி விடும். இதனால் அவர்களை டிராக் செய்வது மிகவும் கடினம். நல்ல விதமாகப் பயன்படுத்துபவர்களுக்கு விபிஎன் பாதுகாப்பான அம்சம் தான். ஆனால் குற்றவாளிகள் கையில் சிக்கும் பட்சத்தில் பல நல்லவர்களுக்கு ஆபத்து உள்ளது. அது தான் இதிலுள்ள மிகப்பெரிய மைனஸ் ஆகும்.
இந்நிலையில், இந்தியாவில் இந்த விபிஎன் சேவைக்கு தடை கோரி நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்திருக்கிறது.
உள்துறை அமைச்சகத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள பரிந்துரையில், “விபிஎன் சேவைகளும் டார்க் வெப் சேவையும் சைபர் பாதுகாப்புக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. குற்றவாளிகளை அடையாளம் தெரியாத வகையில் ஆன்லைனில் செயல்பட அனுமதித்து விடுகிறது. விபிஎன்களை எளிதாகப் பதிவிறக்கம் செய்ய முடியும். இது பெரும் குற்றங்களுக்கு வழிவகுத்து விடுகிறது. ஆகவே மத்திய உள்துறை அமைச்சகம், ஐடி அமைச்சகமும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்களின் உதவியுடன் அதுபோன்ற விபிஎன்களையும் டார்க் வெப்பையும் கண்டறிந்து நிரந்தரமாக தடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.