பெற்ற மகளுக்கு மதுவை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது!
பெற்ற தந்தையே மகளை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. இதற்கு மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் நேற்று முன்தினம் மன அழுத்ததுடன் 14 வயது சிறுமி ஒருவர் சுற்றித்திரிந்துள்ளார்.
இதைப் பார்த்த காவல்துறையினர், அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அச்சிறுமி பதில் சொல்லாமல் இருந்ததால், காவல்துறையினர் புதுவண்ணாரப்பேட்டையில் இருந்த தனியார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். காப்பகத்தில் அச்சிறுமிக்கு உணவு கொடுத்தபோது சாப்பிடாமல் சோகத்துடன் இருந்துள்ளாள்.
காப்பகத்தில் இருந்தவர்கள் அந்த சிறுமியிடம் விசாரித்தனர். அச்சிறுமி, செங்கல்பட்டு மாவட்டம் கரும்பாக்கத்தை சேர்ந்தவர் என் தந்தை குமாா் (40). என் அம்மா உயிரிழந்து 10 ஆண்டுகள் ஆகிறது. இரண்டாவது மனைவி கஸ்தூரி. கடந்த ஒரு மாத காலமாக தந்தை குமாா் என்னை பாலியல் வன்கொடுமை செய்து வருகிறார்.
இது குறித்து என் சித்தியிடம் கூறியும் அவர் கண்டுக்கொள்ளவில்லை. இதனால் நான் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன் என்று அச்சிறுமி அழுதுகொண்டே கூறியுள்ளார். இச்சிறுமி சொன்னதை கேட்டதும் காப்பகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து காவல்துறையினர் மற்றும் குழந்தை நல பாதுகாப்பு அமைப்பிற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள் , திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகார் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டம் விரைந்த போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமிக்கு அவரது தந்தை குமாா் மதுவை ஊற்றி கொடுத்து பலமுறை உடலுறவு கொண்டு துன்புறுத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து, தந்தையையும், அவரது சித்தி கஸ்தூாிரையு கைது செய்த போலீசார் இவர்கள் இருவர் மீதும் போக்சோ உள்ளிட்ட 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.