திருட வந்தவர்களை சத்தம் போட்டு காட்டிக் கொடுத்த ஆட்டுக் குட்டிகள் : ருசிகர சம்பவம்!
கோவை மாவட்டம், வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் தனது ராஜமாணிக்கத்துடன் இணைந்து வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் 12 ஆடுகளை வளர்த்து வந்தனர். ராஜமாணிக்கம் தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்ட பிறகு, வீட்டின் வெளியே உள்ள காலியிடத்தில் ஆடுகளை கட்டி வைப்பதை வழக்கம்.
இந்நிலையில், வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்ட பிறகு நேற்று இரவு ஆட்டுக்குட்டிகளை கட்டி வைத்து விட்டு தூங்க சென்றார். அப்போது, வழக்கத்திற்கு மாறாக ஆடுகள் சத்தம் போட்டுகொண்டிருந்தன.
ஆடுகளின் சத்தத்தை கேட்டு தூங்கிக்கொண்டிருந்த ராஜமாணிக்கம் மற்றும் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் சதீஷ்குமார் ஆகியோர்கள் எழுந்து வந்து பார்த்தனர்.
அப்போது, ஆடுகளை மர்ம நபர்கள் திருட வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, ஆடு திருட வந்தவர்களை விரட்டிப்பிடித்து வடவள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்கள்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் பெயர் சரவணன் (24) மற்றும் சண்முகம் (42) என்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.