கோபத்தில் ஆசிட் வீசிய கொடூர கணவன் - பரிதாபமாக உயிரிழந்த மனைவி

samugam-viral-news
By Nandhini Aug 31, 2021 07:43 AM GMT
Report

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஏசுதாஸ். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.

இந்நிலையில், அடிக்கடிக்கு கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனால், ரேவதியை விவாகரத்து செய்ய ஏசுதாஸ் நடவடிக்கை மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில், சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே ரேவதி தனது தாயுடன் சொந்த ஊருக்கு செல்வதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கணவர் ஏசுதாஸ் ரேவதி மீது ஆசிட்டை வீசினார். ஆசிட் வீச்சில் ரேவதியின் முதுகுப்பகுதி மிகவும் பாதிக்கப்பட்டது.

உடனே, ரேவதியை அங்கிருந்தவர்கள் அவசரமாக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக சேலம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரேவதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தலைமறைவாக இருந்த ஏசுதாஸை போலீசார் கைது செய்துள்ளனர்.  

கோபத்தில் ஆசிட் வீசிய கொடூர கணவன் - பரிதாபமாக உயிரிழந்த மனைவி | Samugam Viral News