‘என்னை விட்டுவிடுங்கள்...’ என்று கதறிய மனிதனின் கால்களை கட்டி வண்டியில் இழுத்துச் சென்று தாக்குதல் - பின்பு நடந்த விபரீதம்

samugam-viral-news
By Nandhini Aug 30, 2021 07:10 AM GMT
Report

மத்திய பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கன்ஹையலால். இவர் இருசக்கர வாகனத்தில் கடந்து சென்ற போது குர்ஜார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் மீது மோதியுள்ளார்.

இதனால், அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இவரை பிடித்து அடிக்க ஆரம்பித்துள்ளனர். இவரை பிடித்து அடித்ததோடு மட்டுமல்லாமல் சரக்கு வாகனம் ஒன்றின் பின்னால் இவரின் காலைகட்டி சாலையில் தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த கன்ஹயலால் தன்னை விட்டுவிடுமாறு கதறியுள்ளார். கெஞ்சியும் உள்ளார்.

ஆனால், அவர் தரதரவென்று இழுத்துச் செல்லப்படுவதை படம்பிடித்து மகிழ்ந்துள்ளனர். சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்ட அவரை விடுவித்துவிட்டு மீண்டும் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

கடைசியில் திருடன் ஒருவனை பிடித்து வைத்து உள்ளதாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். மாவட்ட அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சரக்கு வாகனத்தை இயக்கிய ஓட்டுநர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இது குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.