நடுவழியில் பழுதடைந்து நின்ற ரயில் - கைகளால் தள்ளிச்சென்ற வீடியோ வைரல்

samugam-viral-news
By Nandhini Aug 30, 2021 05:42 AM GMT
Report

மத்திய பிரதேச மாநிலம் சரிதா என்கிற இடத்தில் ரயிலில் சென்று மின்சார வயர்களை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வந்தார்கள். அப்போது, ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் நடுவழியில் நின்றது. இதனால், சோதனை ரயிலில் ஒரு பெட்டி மட்டுமே இணைக்கப்பட்டிருப்பது வழக்கம்.

இதனையடுத்து, ரயில்வே ஊழியர்கள் மற்றும் அங்கிருந்து பொதுமக்கள் என 30க்கும் மேற்பட்டோர் தங்கள் கைகளால் அழைத்துச் சென்றனர்.

ஒரு தண்டவாளத்தில் இருந்து இன்னொரு தண்டவாளத்திற்கு ரயில் பெட்டியை கைகளால் தள்ளி வைத்த அதிகாரிகளின் செயல் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. ரயிலை கைகளால் தாங்கிக் கொள்ளும் இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.