குப்பையிலிருந்து மின்சாரம் உற்பத்தி : சிவகங்கை கிராம மக்களை பாராட்டினார் பிரதமர் மோடி
சிவகங்கை அருகே குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் காஞ்சிரங்கால் கிராம மக்களை பிரதமர் மோடி பாராட்டியிருக்கிறார்.
வானொலியில் மனதின் குரல் என்ற மாதாந்திர நிகழ்ச்சியில் பிரதமர் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் ஊராட்சியில் மக்கள் உதவியுடன் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். தமது தேவைகளை தாமே பூர்த்தி செய்து கொள்வதன் மூலம் காஞ்சிரங்கால் மக்கள் நாட்டுக்கே முன்னுதாரணமாக திகழ்ந்து வருவதாக கூறினார்.
மேலும் பேசிய பிரதமர் மோடி, ஒலிம்பிக்கில் பங்கேற்ற போட்டியாளர்களின் சாதனைகளையும் சுட்டிக்காட்டினார். விளையாட்டுத்துறையிலிருந்து விண்வெளித்துறை வரை இந்திய இளைஞர்கள் புதிய இலக்குகளை நோக்கி ஆர்வத்துடன் பயணித்து வருகிறார்கள் என்று குறிப்பிட்டார். இந்தியர்கள் தங்கள் பாரம்பரியத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறி அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகளை தெரிவித்தார்.