பாழடைந்த பங்களாவில் சிறுமியை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை- இளைஞர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது!
கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுமி 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில், சிறுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த ஐடிஐ மாணவர் வெள்ளிமலை (19) என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது.
இதனால், இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். திடீரென்று கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி வீட்டிலிருந்து மாயமானார். பெற்றோர்கள் சிறுமியை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதனையடுத்து, பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரை பதிவு செய்த போலீசார், சிறுமியை தேடி வந்தனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில், வெள்ளிமலை வெள்ளலூர் பகுதியில் உள்ள பாழடைந்த பங்களாவிற்கு அடிக்கடி மாணவர் ஒருவர் அடிக்கடி சென்று வருவதாக தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, அந்த பாழடைந்த பங்களாவிற்கு போலீசார் சென்று சோதனையிட்டபோது, சிறுமி அங்கு அடைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அந்த சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச்சென்று, பங்களாவில் அடைத்து வைத்து வெள்ளிமலை பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரியவந்தது.
சிறுமியை மீட்ட போலீசார், அவரை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசார், வெள்ளிமலை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு மாணவனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாணவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.