பாம்புக்கு ராக்கி கயிறு கட்ட முயன்ற பாம்பாட்டி - அடுத்து நடந்த விபரீதம்

samugam-viral-news
By Nandhini Aug 27, 2021 05:44 AM GMT
Report

பாம்புக்கு ராக்கி கட்டும்போது பாம்பு நறுக்கென்று கொத்தியதில் பாம்பாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட்டது.

ரக்ஷா பந்தன் நாளில் சகோதரர்களின் கையில் சகோதரிகள் ராக்கி கயிறை கட்டி சகோதர பாசத்தை வெளிப்படுத்துவார்கள். இந்நிலையில், பீகாரில் பாம்பாட்டி ஒருவர், தன்னுடன் இருக்கும் இரண்டு பாம்புகளுக்கு ராக்கி கயிறு கட்டி தன் பாசத்தை வெளிப்படுத்த நினைத்தார்.

இதனையடுத்து, பாம்புகளுக்குக் குங்குமம் வைத்து, ராக்கி கட்ட முயற்சி செய்தார். அப்போது ஒரு பாம்பு திடீரென பாம்பாட்டியின் காலை கடித்தது. இருப்பினும் பாம்புகளை விடாமல் கையில் பிடித்துக்கொண்டே இருந்தார். இதனை சுற்றி இருப்பவர்கள் அனைவரும் பீதியில் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இதனையடுத்து, அந்த பாம்பாட்டியை மருத்துவமனை அழைத்து சென்று அங்கிருந்தவர்கள் சேர்த்துள்ளனர். இருப்பினும், மருத்துவமனையில் சிகிச்சை பலனில்லாமல் அந்த பாம்பாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.