டெல்லியில் தொடர்ந்து 2-வது நாளாக ஆப்கானிஸ்தான் அகதிகள் போராட்டம்

samugam-viral-news
By Nandhini Aug 24, 2021 08:25 AM GMT
Report

டெல்லியில் ஐ.நா. அகதிகள் ஆணைய அலுவலகம் முன்பாக ஆப்கானிஸ்தான் அகதிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.

இதனால், அந்நாட்டிலிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறி வருகிறார்கள். இந்நிலையில், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு அகதிகள் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றும், மூன்றாவது நாட்டில் குடியமர்த்துதலுக்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கைகளை முன் வைத்து ஆப்கானிஸ்தான அகதிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 

டெல்லியில் தொடர்ந்து 2-வது நாளாக ஆப்கானிஸ்தான் அகதிகள் போராட்டம் | Samugam Viral News