ஈவு இரக்கமின்றி முதியவரை கட்டையால் சராமாரியாக அடித்த இளைஞன் - அடுத்து நடந்த விபரீதம்!

samugam-viral-news
By Nandhini Aug 23, 2021 12:02 PM GMT
Report

திருப்பூர் மாவட்டம், இராமியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (80). இவர் ஆடு வளர்ப்பு மற்றும் விவசாயம் செய்து வருகிறார்கள்.

இவர், தனது சகோதரி பொன்னம்மாளுடன் (75) வசித்து வந்தார். இவரது வீட்டிற்கு பின்பக்கத்து வீட்டில் சுசீலா (45) என்பவர் தனது மூத்தமகன் மனோஜ்குமார் (31), மருமகள் ரம்யா (28), மகன் சந்தோஷ் (28) ஆகியோருடன் வசித்து வருகிறார். சந்தோஷிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் டெய்லராக வேலை செய்து வருகிறார்.

சந்தோஷ்க்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த முதியவர் வெங்கடாசலத்திற்கும் இடையே நீண்ட நாட்களாக நிலத்தகராறு இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவு குடிபோதையில் வந்த சந்தோஷ்ஷிற்கும், முதியவர் வெங்கடாசலத்திற்கும் இடையே நிலத்தகராறு குறித்து வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சந்தோஷ் கட்டையால் முதியவரை சரமாரியாக தாக்கி இருக்கிறார்.

இதில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். இதனையடுத்து, பயந்து போன சந்தோஷ் உடனடியாக முதியவரை இழுத்து வந்து தனது வீட்டு சமையலறையில் சாக்கு மூட்டையாக கட்டி வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து, சேயூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவான சந்தோஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஈவு இரக்கமின்றி முதியவரை கட்டையால் சராமாரியாக அடித்த இளைஞன் - அடுத்து நடந்த விபரீதம்! | Samugam Viral News