‘சிறுநீர்’ கழித்து பானிபூரி ரச வாளியில் ஊற்றிய நபர் - அதிர்ச்சி வீடியோ வைரல்!

arrest samugam-viral-video
By Nandhini Aug 23, 2021 11:34 AM GMT
Report

சாலையோரக் கடைகளில் விற்கப்படும் உணவின் விலை சற்று மலிவு தான். இன்னொரு காரணமும் இருக்கு. பெரிய பெரிய ஹோட்டல்களில் கூட கிடைக்காத டேஸ்ட் சாலையோராக் கடைகளில் கிடைக்கும்.

அதனாலேயே சாலையோரக் கடையில் துரித உணவுகளை அதிகம் விரும்பி மக்கள் சாப்பிடுவார்கள். தற்போது சமூகவலைத்தளத்தில் ஒரு வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவை பார்த்த பிறகு, இனி பானிபூரி சாப்பிடவே கூடாது என்ற அளவிற்கு ஒரு சம்பவம் நடந்தது. அசாம் மாநிலம் குவஹாத்தி நகரில் பானிபுரி கடை நடத்தும் நபர், கப்பில் சிறுநீர் கழித்து அதை பூரிக்குள் வைக்கும் ரசம் உள்ள வாளியில் ஊற்றுகிறார். பின்பு, அதனைக் கலக்குகிறார்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வெளியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து கடை உரிமையாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.