வீண் போகாத இறை நம்பிக்கை... திருவண்ணாமலையில் குடும்பத்துடன் வேண்டுதலை நிறைவேற்றிய துர்கா ஸ்டாலின்
சட்டசபை தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தார். இதனையடுத்து, வேண்டுதலை நிறைவேற்ற பல்வேறு கோயில்களுக்கு சென்று பிராத்தனை செய்து வருகிறார் துர்கா ஸ்டாலின்.
இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் மகள் செந்தாமரை சபரீசன் உள்ளிட்டோர் சிறப்பு அபிஷேக ஆராதனையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் கடவுள் நம்பிக்கையற்றவர்.
இருந்தாலும், துர்கா ஸ்டாலின் அதிக இறை பக்தி கொண்டவர். அவரது இறை பக்தி செயல்பாடுகளுக்கு மு.க.ஸ்டாலின் எப்போதும் தடை விதித்தது கிடையாது. மு.க.ஸ்டாலின் சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சியை பிடிக்க வேண்டும் என பல்வேறு கோயில்களுக்கு சென்று பிராத்தனை செய்து வந்தார் துர்கா ஸ்டாலின். ஆனால், அவரின் வேண்டுதல்கள் வீண் போகவில்லை.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். அதன் பிறகு கொரோனா 2ம் அலை பரவலால் துர்கா ஸ்டாலினால் கோயில்களுக்கு செல்ல இயலவில்லை. இந்நிலையில், திருவண்ணாமலை சென்ற அவர் கிரிவலம் வந்து வணங்கினார்.
தன்னுடைய கணவர் வெற்றி பெற்று முதல்வராக வேண்டும் என்ற நேர்த்திக்கடன் நிறைவேறியதால் மகிழ்ச்சியடைந்திருக்கும் துர்கா ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களுக்கும் சென்று நேர்த்திக்கடனை செலுத்தி வருகிறார்.