“எனக்கு ஆண்மை கிடையாது” – சிவசங்கர் பாபா பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்
சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் சாமியார் என்று சொல்லிக்கொண்டு, அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்ததையடுத்து, கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி டெல்லியில் சிவசங்கர் பாபாவை கைது போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து, அவர் மீது 3 போக்சோ வழக்குகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர். அவருக்கு உடந்தையாக இருந்த பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
2 வழக்குகளில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா மனு தாக்கல் செய்தார். இரத்த கொதிப்பு, நீரிழிவு, இதயம் சார்ந்த பிரச்சனைகள் உள்ளதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். முன் ஜாமீன் வழங்காமல், இந்த இரு மனுக்களையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
முதல் போக்சோ வழக்கிலும் பாபாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. தற்போது அவரது ஜாமீன் மனுவில் மறைந்திருந்த ஒரு விஷயம் தற்போது வெளிச்சத்தில் வந்துள்ளது. அந்த மனுக்களில் தான், ‘ஒரு ஆண்மையற்றவன் என்பதால் யாரையும் பாலியல் வன்கொடுமை செய்யவில்லை’ எனக் கூறி ஜாமீனில் விடுவிக்குமாறு கோரி இருக்கிறார்.
சென்னை அரசு மருத்துவமனையில் தனக்கு மேற்கொண்ட ஆண்மை பரிசோதனையில் தனக்கு ஆண்மை இல்லை என முடிவு வந்ததாகவும், சிவசங்கர் பாபா மனுவில் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த விவகாரம் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.