மதுரை ஆதீனத்தின் 293வது மடாதிபதியாக ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பதவியேற்பு!
மதுரை ஆதீனத்தின் 293வது மடாதிபதியாக ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பொறுப்பெற்றுக்கொண்டார்.
மதுரை ஆதீனத்தின் 292வது மடாதிபதி அருணகிரிநாதர் (77) உடல்நலக்குறைவால் கடந்த 13ம் தேதி காலமானார்.
அவரது மறைவிற்கு பல்வேறு கட்சித்தலைவர்கள், பக்தர்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்தனர். அத்துடன் அவரது உடல் மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் பதவியேற்றுக்கொண்டார். புகழ்பெற்ற மதுரை ஆதீனத்தின் 292வது ஆதீனமாக இருந்த அருணகிரிநாதர் மறைவையடுத்து புதிய ஆதீனம் பதவி ஏற்றுக் கொண்டார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து தர்மபுரம் ஆதீனங்களும் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மதியம் மகேஸ்வர பூஜையும், இரவில் பட்டின பிரவேசமும் இதை தொடர்ந்து கொலு காட்சியும் நடைபெற உள்ளது. 2019ஆம் ஆண்டு இளைய சன்னிதானமாக ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகளை அருணகிரிநாதர் நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.