அருள் வந்து ஆடிய பூசாரி : 40 அடி பள்ளத்தில் தவறி விழுந்து பரிதாப பலி!
பூஜை செய்யும்போது அருள் வந்து பூசாரி 40 அடி பள்ளத்தில் விழுந்து பலியான சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள சிங்கமலையில் கம்பமல்லையா சாமி கோவில் ஒன்று இருக்கிறது.
இக்கோவிலில் இன்று வருடாந்திர பூஜை நடந்தது. அப்போது கோவில் பூசாரி அருள் வந்து ஆடியபடியே பூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது, சுமார் 40 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் இறங்கும் போது கால் தவறி விழுந்து பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் நேரில் பார்த்துக் கொண்டிருந்த பக்தர்களை பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பூசாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.