கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் காலில் விழ வைக்கப்பட்ட சம்பவம்- வீடியோ வெளியிட்ட நபர் மீது போலீஸ் வழக்குப்பதிவு
பட்டியல் இனத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக உதவியாளர் முத்துசாமியை காலில் விழுந்து மன்னிப்பு கேட்கச் சொன்னதாக விவசாயி கோபால்சாமியை மீது குற்றம் சாட்டப்பட்டு வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு தமிழகம் முழுவதும் பெரும் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில், முத்துசாமி விவசாயி, கோபால்சாமியை அடித்து கீழே தள்ளிதோடு மட்டுமல்லாமல், ஆபாச வார்த்தைகளால் திட்டி சாதிப் பெயரைச் சொல்லி திட்டிய உண்மையான மற்றொரு வீடியோ மூலம் அம்பலமாகி இருக்கிறது. இந்நிலையில், கோவை ஒட்டர்பாளையம் விஏஓ அலுவலக சம்பவத்தை வீடியோ எடுத்த அவர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.
இரு சமுதாயங்கள் இடையே மோதலை உருவாக்கும் வகையில் வீடியோ வெளியிட்ட நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வீடியோ தொடர்பாக உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் முத்துசாமி, கோபால் என்பவர் காலில் விழும் வீடியோ கடந்த 7ம் தேதி சமூகவலைத்தளத்தில் வெளியானது. இதில் உண்மை சம்பவத்தை மறைத்து இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவில் உண்மை சம்பவம் மறைக்கப்பட்டு போலியான தகவல் பரப்பப்பட்டது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து அன்னூர் வடக்கு வருவாய் ஆய்வாளர் பெனாசீர் பேகம் அளித்த புகாரில் வீடியோ எடுத்து வெளியிட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள அன்னூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.