ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீயில் கருகி உயிரிழந்ததால் பரபரப்பு! போலீசார் தீவிர விசாரணை
பழனி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, வலசுவில் ஒரே குடும்பத்தில் 4 பேர் உடல் கருகிய நிலையில் தீயிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்கள்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த முருகேஷன், மனைவி வளர்மதி, மகள் சிவரஞ்சனி, மகன் கார்த்தி நான்கு பேர் வைக்கோல் படப்பிற்குள் இருந்து கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விவசாயி முருகேசன் குடும்பத்துடன் கொல்லப்பட்டாரா? அல்லது 4 பேரும் தற்கொலை செய்துகொண்டனரா? என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எனவே இதை சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உடல் கருவி உயிரிழந்ததால் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.