அகரம் அகழ்வாய்வில் கசுடுமண்ணால் ஆன முத்திரை கண்டுபிடிப்பு : அமைச்சர் தங்கம் தென்னரசு ட்வீட்

samugam-viral-news
By Nandhini Aug 19, 2021 03:19 PM GMT
Report

அகரம் அகழாய்வுப் பணி நடைபெறும் இடத்திலிருந்து கண்டறியப்பட்ட சுடுமண்ணால் ஆன முத்திரையை அமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். திருப்புவனம் அருகே கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணி கடந்த பிப்ரவரி 19-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்த அகழாய்வுப் பணி கீழடி மற்றும் அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களிலும் விரிவுபடுத்தப்பட்டு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

அவற்றில் செங்கல் கட்டுமானம், இரட்டைச் சுவர், விலங்குகளின் எலும்பு, மனித எலும்புகள், மண் பானைகள், ஓடுகள், சிறிய உலைகலன் உள்ளிட்ட பழமையான பொருட்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. அகரத்தில் ஆறு குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன.

இங்கு நீள வடிவ பச்சை நிற பாசிகள் போன்றவை ஏற்கெனவே கண்டெடுக்கப்பட்டுள்ளது. தற்போது அந்தப் பகுதியில் இருந்து சுடுமண்ணால் ஆன முத்திரை ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.