பிரசவ வலியால் துடி துடித்த பெண் - மருத்துவம் பார்த்த ஊழியர் - ஆம்புலன்சில் பிறந்த அழகான பெண் குழந்தை!

samugam-viral-news
By Nandhini Aug 19, 2021 08:08 AM GMT
Report

கோவை மாவட்டம், காமராஜர் நகர் பகுதியில், வசிக்கும் வட இந்திய பெண்ணுக்கு நேற்று மாலை பிரசவ வலி ஏற்பட்டது.

பிரசவ வலியால் துடிதுடித்த மருத்துவமனைக்கு பெண்ணை அழைத்து செல்ல தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸை அழைத்தனர். இதனையடுத்து, 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சுரேஷ் மற்றும் அவசர கால மருத்துவ நிபுணர் கண்ணன், சுந்தராபுரம் அப்பகுதிக்கு விரைந்துச் சென்றனர்.

அப்பொழுது பிரசவ வலியால் துடித்த பெண்ணை உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். ஆனால், ஆம்புலன்சில் வலி தாங்க முடியாமல் துடிதுடித்த பெண்ணுக்கு ஊழியர் பிரசவம் பார்த்துள்ளார்.

அப்போது, அந்த பெண்ணிற்கு ஒரு அழகான பெண் குழந்தை ஆம்புலன்சிலேயே பிறந்தது. இதனையடுத்து, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

பிரசவ வலியால் துடி துடித்த பெண் - மருத்துவம் பார்த்த ஊழியர் - ஆம்புலன்சில் பிறந்த அழகான பெண் குழந்தை! | Samugam Viral News