புனேவில் பிரதமர் மோடிக்கு கோவில் கட்டிய பாஜக தொண்டர்! ஆர்வத்துடன் பார்த்துச் செல்லும் மக்கள்
புனேவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மார்பளவு சிலை கொண்ட கோவிலை பாஜக தொண்டர் ஒருவர் கட்டியுள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
மஹாராஷ்டிராவின் புனே நகரைச் சேர்ந்தவர் பா.ஜ.க தொண்டர் மயூர் முந்தே. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இவர் அதே பகுதியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மார்பளவு சிலையுடன் சிறிய கோவில் கட்டியிருக்கிறார்.
இதுகுறித்து மயூர் கூறுகையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பிரதமருக்கு மரியாதை செலுத்தவே புனேயில் அவருக்கு கோவில் கட்ட முடிவு செய்தேன். ஜம்மு – காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, முத்தலாக் தடை சட்டம் உட்பட பல திட்டங்களை பிரதமர் வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கிறார்.
அதனால், நான் எனது சொந்த இடத்தில், சொந்த செலவில் சிறிய அளவிலான கோவிலை கட்டியிருக்கிறேன். இதற்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் செலவாகி இருக்கிறது.
மோடியின் மார்பளவு சிலை மற்றும் கோவில் கட்ட தேவைப்பட்ட சிவப்பு பளிங்கு கற்கள் ஆகியவை ஜெய்பூரிலிருந்து வாங்கி வந்தேன் என்றார். பிரதமர் நரேந்திர மோடிக்கு கட்டப்பட்ட கோவிலை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்து விட்டுச் செல்கின்றனர்.