ஆசைக்கு இணங்க மறுத்ததால், தனியாக இருந்த நண்பனின் மனைவியை தீ வைத்து கொளுத்திய இளைஞன்!

samugam-viral-news
By Nandhini Aug 18, 2021 09:54 AM GMT
Report

உத்திர பிரதேச மாநிலம், தத்தாவ்ரா என்ற கிராமத்தில் பெண் ஒருவர் தன் கணவரோடு வாழ்ந்து வந்தார். அப்பெண்ணின் கணவர் குஜராத்தில் கூலி வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், விபின் யாதவ் என்பவர் அப்பெண்ணின் கணவருடன் வேலை பார்த்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு விபின் யாதவ் குஜராத்திலிருந்து அவர் கிராமத்திற்கு வந்தார்.

கடந்த 14ம் தேதி அன்று விபின் யாதவ் தன் நண்பனின் மனைவி தனியே இருக்கும் வீட்டிற்குள் நுழைந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். உடனே, அப்பெண் அவனிடமிருந்து தப்பி சென்று அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் இது தொடர்பாக விபின் யாதவ் மீது வழக்கு பதிந்து செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், சென்ற வாரம் அந்த பெண், விபின் யாதவ் இருக்கும் பகுதி வழியாக நடந்து சென்றார். அப்போது, அப்பெண் வருவதைப் பார்த்த விபின் யாதவ் தன் மீது ஏன் போலீசில் புகார் கொடுத்தாய் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்கு வாதம் முற்றியது.

ஆத்திரம் அடைந்த விபின், பெட்ரோலை எடுத்து அந்தப் பெண்ணின் மீது ஊற்றி தீ வைத்தான். தீ மளமளவென உடலில் பற்றி எரிந்தது. வலி தாங்க முடியாமல் தீயில் பெண் கருகினாள்.

இவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அப்பெண்ணை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தனர். 

ஆசைக்கு இணங்க மறுத்ததால், தனியாக இருந்த நண்பனின் மனைவியை தீ வைத்து கொளுத்திய இளைஞன்! | Samugam Viral News