13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - 4 இளைஞர்கள் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது!
அரியலூர் அருகே 13 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த 4 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் கடந்த 12ம் தேதி தோட்டத்தில் ஆடு மேய்க்க சென்றார்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித் (33) என்பவர், சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அவரது தாயாரிடம் அழுதுக்கொண்டே சென்று தெரிவித்தாள்.
இதனையடுத்து, அவர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் மகளிர் போலீசார் ரஞ்சித் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இது தொடர்பாக சிறுமியிடம் போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டதில், அதே பகுதியை சேர்ந்த ரமேஷ், சத்யராஜ் உள்ளிட்ட 3 இளைஞர்கள் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அவர்கள் மூவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.