தன் வறுமையை போக்க, உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் மனைவியை சாமியார் முன்பு உட்கார வைத்த கணவன்! அதிர்ச்சி சம்பவம்
மகாராட்டிர மாநிலம், நாசிக் நகரத்தில் வசித்து வந்த ஒரு ஆண், தன் வறுமை போக்க என்ன செய்ய வேண்டும் என்று சாமியாரிடம் கேட்டுள்ளான்.
அதற்கு அந்த சாமியார், நான் செய்யும் சிறப்பு பூஜையில் உன் மனைவி ஒட்டு துணி இல்லாமல் உட்கார வேண்டும் என்று சாமியார் கூறியிருக்கிறார்.
இந்த பூஜையை நீ செய்து வந்தால் நீ நினைத்து எல்லாம் நடக்கும் என்று அந்த ஆணுக்கு அந்த சாமியார் ஆசைவார்த்தைக் காட்டியுள்ளார். இந்த பூஜைக்கு அந்த ஆணும் சம்மதித்துள்ளார்.
இதை வீட்டிற்கு சென்று சொன்னதற்கு அவரின் மனைவி இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் மனைவியை கணவன் சித்ரவதை செய்துள்ளான்.
வீட்டில் செல்வம் கொட்டும் என்பதற்காக மானத்தை இழக்க தயாராக இல்லை என்று மனைவி பிடிவாதம் பிடிக்க, வலுக்கட்டாயமாக அவரை அழைத்துச்சென்று ஒட்டு துணி இல்லாமல் சாமியார் முன் உட்கார வைத்துள்ளார் கணவன். மனைவியை உட்கார வைத்து விட்டு வெளியே வந்து காவல் காத்து நின்றுள்ளான்.
கணவனே காவல் காத்து நிற்பதால், பூஜை என்கிற பெயரில் அந்த பெண்ணை நிதானமாக ரசித்துவிட்டு அப்புறமாக பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளான் அந்த சாமியார். இப்படி 7 மாதங்களாக அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார் அந்த சாமியார்.
இந்த கொடுமையை தாங்கிக்கொள்ள முடியாமல் அந்த பெண், கந்துபூர் போலீசாரிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகளை சொல்லி அழுதிருக்கிறாள். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து சாமியாரை கைது செய்ய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.