திருமணமான ஆண்கள் அனைவருக்குமே 2 மனைவிகள் கட்டாயமாம்! வியக்க வைக்கும் கிராமம்!
திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமண கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் நம் வாழ் நாளில் மறக்கவே முடியாது. அந்த வகையில் கிராமம் ஒன்றில் வசிக்கும் திருமணமான ஆண்கள் அனைவருக்கும் 2 மனைவிகள் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் ராஜஸ்தான் மாநிலத்தின் பார்பர் மாவட்டத்தில் அமைந்துள்ளது தேரசர் என்ற கிராமம். அந்த கிராமத்தில் சுமார் 600 பேர் வாழ்ந்து வருகிறார்கள்.
பல ஆண்டுகளாக அங்கு வாழும் அவர்கள் ஒரு வித்தியாசமான பழக்கத்தை வைத்துள்ளார்கள். அதை அந்த கிராம மக்கள் அனைவரும் பின்பற்றி வருகிறார்கள்.
அந்த கிராமத்தில் உள்ள திருமணமான ஆண்கள் அனைவருக்கும் இரண்டு மனைவிகள் இருக்க வேண்டும். இது அவர்கள் பின்பற்றும் சமயச் சடங்கு இல்லை. ஆனால், இப்பகுதியில் வாழும் மக்களின் கலாச்சாரம் என்று கூறப்படுகிறது.
இந்த கிராமத்தில், இஸ்லாமிய மக்களும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களும் இதே பழக்கத்தைப் பின்பற்றி வருகிறார்கள்.
இந்த ஊரில் வாழும் ஆண்கள் திருமணம் செய்ய விரும்பினால் முதல் மனைவியை திருமணம் செய்த பிறகு, கட்டாயம் இரண்டாவது மனைவியையும் திருமணம் செய்து கொள்ள வேண்டுமாம். முதல் முதல் மனைவிக்கு குழந்தைகள் பிறக்காது எனக் கூறப்படுகிறது.
அதனால் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் யாரும் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு. அவர் மூலமே குழந்தையை பெற்றுக் கொள்கிறார்கள்.
பலர் தனது முதல் மனைவியின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சி செய்தாலும் அது தோல்வியிலேயே முடிந்து போகுமாம் என கூறி கிராமவாசிகள் வியக்க வைக்கிறார்கள்.