ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த பெண் - ஓடிச் சென்று காப்பாற்றிய காவலர் - வீடியோ வைரல்
samugam-train
By Nandhini
மகாராஷ்டிராவின் சந்துர்ஷ்ட் சாலை ரயில் நிலையத்தில், ரயில் ஒன்று செல்லத் தொடங்கியது. அப்போது, ஓடும் ரயிலில் ஏற முயன்ற 50 வயது மதிக்கத்தக்க பெண் திடீரென தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, அங்கிருந்த ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் விரைந்து ஓடி வந்து அப்பெண்ணை காப்பாற்றியுள்ளார்.
ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்காமல் அந்த பெண்மணி நூலிழையில் காப்பாற்றப்பட்டார். இச்சம்பவத்தையடுத்து, துரிதமாக செயல்பட்ட காவலரை, சக பயணிகளும், உயரதிகாரிகளும் பாராட்டியுள்ளார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.