விஜயபாஸ்கரின் மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா தொற்று உள்ளது - அதிமுக வழக்கறிஞர் தகவல்

samugam-tamilnadu-vijayabaskar
By Nandhini Oct 18, 2021 05:31 AM GMT
Report

விஜயபாஸ்கரின் மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் தெரிவித்துள்ளார்.

வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

அத்துடன் விஜயபாஸ்கர் மாமனார், தங்கை, தம்பி உள்ளிட்ட உறவினர்களின் வீடுகளிலும் காலை 6 மணி முதல் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.

மேலும், சென்னை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், திருச்சி என 43 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்ர் அவர்களின் மனைவி மற்றும் மூத்த மகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் தெரிவித்திருக்கிறார். மேலும் இவர்கள் இருவரும் வீட்டில் தனியறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்திருக்கிறார்.