ஒன்றரை வருடங்களுக்கு பிறகு இன்று 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு - வரவேற்பு வழங்க சிறப்பு ஏற்பாடுகள்
தமிழகத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முதல் 1 முதல் 8-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. தற்போது, கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதையடுத்து, இன்று முதல் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிக்கு வரும் மாணவர்களை வரவேற்க, எம்எல்ஏக்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
விருந்தினர்களை வரவேற்பது போல பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு வரவேற்பு கொடுங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் இன்று பள்ளிகள் திறக்கப்படுவதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. பள்ளிகளில் முதல் 2 வாரங்களுக்கு ஓவியம், கதைப்பாடல், விளையாட்டு உட்பட மன மகிழ்ச்சி தரக்கூடிய செயல்பாடுகள் மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதற்கான சுற்றறிக்கை மாவட்ட ரீதியாக அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் அதற்கான நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
இன்று கனமழை காரணமாக சில மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.