‘என்னை மன்னித்து விடுங்கள்’ – வேளச்சேரி தொகுதி மக்களிடம் மன்னிப்பு கேட்ட எம்.எல்.ஏ

samugam-tamilnadu-rain
By Nandhini Nov 09, 2021 06:45 AM GMT
Report

வேளச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானா தனது டுவிட்டர் பக்கத்தில் மக்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். தமிழகத்தில் பருவமழை தொடங்கியிருப்பதால், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில், தமிழக முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்கள்.

இந்நிலையில், வேளச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானா தனது டுவிட்டர் பக்கத்தில் மக்களிடம் மன்னிப்பு கேட்டிக்கிறார்.

அந்த டுவிட்டர் பதிவில், ‘வேளச்சேரி மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். முதலில் எனது வீட்டின் நிலைமையை சரி செய்ய வேண்டும். என் குடும்பத்தை வேறொரு பாதுகாப்பான வீட்டிற்கு மாற்றிவிட்டு வருகிறேன். பின்னர் இங்கு வந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவேன்’ என பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வுகளை மேற்கொண்டு நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.