களைகட்டும் தீபாவளி விற்பனை: ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் காவல்துறை
samugam-tamilnadu-diwali-police
By Nandhini
வரும் 4ம் தேதி தீபாவளியையொட்டி சென்னையில் முக்கிய வணிகப் பகுதிகளில் குற்றச்சம்பவங்கள் நடைபெறாத வண்ணம், ட்ரோன் கேமராக்கள் மூலம் காவல்துறையினர் கண்காணிப்பு பணியை மேற்கொண்டிருக்கிறார்கள்.
தியாகராயநகர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம் பகுதியில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனை பயன்படுத்தி சிலர் குற்றச்செயல்களில் ஈடுபடலாம் என்பதால் அதனை தடுக்கும் பொருட்டு ட்ரோன் கேமரா உதவியுடன் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.