என்னப்பா நடக்குது... பாஜகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் - அதிர்ச்சியில் அதிமுகவினர்
சோழவந்தான் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம் பாஜகவில் இணைந்திருக்கிறார். இந்தச் செய்தி அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சோழவந்தான் தொகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம், பாஜகவில் இணைந்திருக்கிறார். இன்று திருப்பூரில் நடந்து வரும் பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில், மாணிக்கம் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்.
அதிமுக வழிகாட்டுதல் குழுவை விரிவிப்படுத்த வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஓபிஎஸ் தரப்பு பேசி வருகிறது.
இந்நிலையில், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, மறைவிற்கு பிறகு, அதிமுக பிளவுபட்டபோது, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளித்தவரும், அதிமுக வழிகாட்டுதல் குழுவை சேர்ந்த 11 உறுப்பினர்களில் ஒருவருமான சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம் பாஜகவில் இணைந்துள்ளது. இது அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.