தொடர்ந்து 12 மணி நேரம் நீச்சல் - உலக சாதனை படைத்த தமிழக சகோதரர்கள்!

samugam-swimming-world-record
By Nandhini Nov 05, 2021 09:08 AM GMT
Report

தூத்துக்குடியைச் கிருஷ்ணன் பெருமாள். இவர் கேபிள் டிவி ஆப்ரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன்கள் விஸ்வநாதன் மற்றும் ராமநாதன். இவர்கள் இருவருக்கும் சிறுவயது முதலே நீச்சல் மீது ஆர்வம் இருந்ததால், நீச்சல் பயிற்சி எடுத்து வந்தனர்.

மேலும், இவர்கள் இருவரும் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களையும் வென்றிருக்கிறார்கள். இந்நிலையில், நீச்சலில் சாதனை படைக்க வேண்டும் என்று விரும்பிய இவர்கள் இரவரும் நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக புதன்கிழமை தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் உள்ள நீச்சல் குளத்தில் 2 சகோதரர்களும் முதல் 2 மணி நேரம் கையையும், காலையும் கட்டிக்கொண்டு நீச்சல் செய்தார்கள்.

இதன் பின்னர் தொடர்ந்து 10 மணி நேரம் நீச்சல் செய்து 12 மணி நேரத்தில் 21 கிலோமீட்டர் 250 மீட்டர் வரை நீச்சல் செய்து உலக சாதனை படைத்துள்ளனர். உலக சாதனை படைத்த இரு சகோதரர்களின் சாதனைகளை அங்கீகரித்து குளோபல் உலக சாதனை புத்தகம் சார்பில் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. உலக சாதனை படைத்த இரு சகோதரர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. 

தொடர்ந்து 12 மணி நேரம் நீச்சல் - உலக சாதனை படைத்த தமிழக சகோதரர்கள்! | Samugam Swimming World Record