14வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட மாடல் அழகி! நடந்தது என்ன?
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் மாடல் அழகி பாவனா கவுதம் (24). உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் கோட்வாலி பகுதி குடியிருப்பில் வசித்து வந்தார்.
இவர் மும்பையில் திரைப்படங்கள் மற்றும் டிவி சீரியல்களில் நடிப்பதற்காக கடும் முயற்சி செய்து வந்தார்.
அப்போது, ஆண் ஒருவருடன் நட்புடன் பழகினார். அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில், அவரது காதலனை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்துள்ளார். இந்த தகவல் அவரது தாய்க்கு சென்றது.
காதலனை வீட்டிற்கு அழைத்து வந்ததற்காக பாவனாவை கடுமையாக போனில் திட்டியுள்ளார் அவரது தாய். இதனையடுத்து, அவரது காதலன் அங்கிருந்து உடனே கிளம்பியிருக்கிறார்.
இதனால், மனமுடைந்த பாவனா, திடீரென 14வது மாடியின் பால்கனிக்கு சென்று, அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பாவனா தங்கியிருந்த அறையை சோதனை செய்த போது அவர் எழுதிய டைரி கிடைத்தது.
அந்த டைரியில் பாவனா, ‘நான் விரைவில் வசதி வாய்ப்புடன் பணக்காரி ஆக போகிறேன், எனக்கு மும்பையில் வேலை கிடைக்கவுள்ளது’ என எழுதி உள்ளார்.
இது குறித்து பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்ட போது, கடந்த சில வாரங்களாகவே, பாவனா கவுதம் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாக அவரது குடும்பத்தினர் கூறினர்.
போலீசார் அவரது காதலனிடமும் விசாரணை நடத்த இருக்கிறார்கள்.
தற்கொலைக்கான முரணம் முழு விசாரணைக்குப் பின்பு தான் தெரியவரும் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.