கணவரை இழந்த தாயை கைவிட்ட பிள்ளைகள் - கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றிய காவலர்
சென்னை பெசன்ட் நகர் கடலில் விழுந்து தற்கொலைக்கு முயற்சி செய்த பெண்ணை ரோந்துப் பணியிலிருந்த காவலர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எலியட்ஸ் கடற்கரையில் ராஜா என்ற காவலர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, பெண் ஒருவர் கடலில் இறங்கி உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்ததை பார்த்ததார். உடனே, ராஜா கடலில் குதித்து அப்பெண்ணை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். பிறகு, அப்பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.
அங்கு அப்பெண்ணிடம் போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில், அப்பெண் புரசைவாக்கத்தை சேர்ந்த மகேஸ்வரி. இவருடைய கணவர் இறந்து விட்டார். இந்நிலையில், பிள்ளைகளும் சரிவர கவனிக்காமல் கைவிட்டதால் தற்கொலைக்கு முயன்றி செய்துள்ளது தெரியவந்தது.
கணவர் இறந்த தினத்தில் உயிரை மாய்த்துக் கொள்ள முற்பட்டதாகவும் மகேஸ்வரி போலீசாரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, அப்பெண்ணின் மகனை வரவழைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.