திருமணம் நிச்சயிக்கப்பட்ட 12 நாளில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட பெண் - அதிர்ச்சி சம்பவம்

samugam-sucide
By Nandhini Nov 14, 2021 05:16 AM GMT
Report

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு நடந்த போட்டோஷூட்டில் வருங்கால கணவர் செய்த சில்மிஷத்தால் மணப்பெண் கடுமையாக திட்டியிருக்கிறார். இதைத் தொடர்ந்து இருவருக்குள்ளும் வாக்குவாதம் அதிகமானதால் மன உளைச்சலுக்கு ஆளாகி வந்திருக்கிறார் மணப்பெண். இதனையடுத்து, வருங்கால கணவர் கொடுத்து வந்த தொந்தரவால் மனமுடைந்து மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், தார் மாவட்டத்தை சேர்ந்தவர் பவித்ரா. இவருக்கும் ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்த அபிநந்தன் என்பவருக்கும் இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 1ம் தேதியன்று திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதன் பிறகு, இருவரும் போட்டோஷூட் நடத்த முடிவு செய்துள்ளனர்.

அதற்காக கடந்த வாரம் உத்தரகன்னடா மாவட்டத்தில் இருக்கும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான தண்டேலியில் போட்டோஷூட் நடத்தியுள்ளனர். அப்போது பவித்ராவிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார் அபிநந்தன். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பவித்ரா திருமணத்திற்கு முன்னரே இப்படி எல்லாம் செய்ய வேண்டாம் என்று கடுமையாக எச்சரித்துள்ளார். இதெல்லாம் சகஜம் என்பது மாதிரி அபிநந்தன் பேச, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் இருவரும் அவர் அவர் வீடு திரும்பி விட்டனர்.

ஆனாலும் செல்போனில் தொடர்ந்து வாக்குவாதம் நடந்து வந்தது இருவருக்குள்ளும். தொடர்ந்து பவித்ராவிடம் கடுமையாக திட்டி, சண்டை போட்டு வந்துள்ளார் அபிநந்தன். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு பவித்ரா தள்ளப்பட்டாள். இதில் மனமுடைந்த பவித்ரா திருமணத்திற்கு முன்னரே கணவன் இப்படியெல்லாம் கொடுமைப்படுத்துகிறாரே என்ற வேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமண நிச்சயதார்த்தம் நடந்த 12 நாளில் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தது.

இது குறித்து, அசோக் நகர் போலீசில் புகார் கொடுத்தனர். வழக்கைப் பதிவு செய்த போலீசார் விரைந்து வந்து பவித்ராவின் உடலை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அபிநந்தன் பவித்ராவை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, பவித்ராவின் பெற்றோர் அபிநந்தன் மீது அளித்த புகாரின் பேரில் அவனை கைது செய்த போலீசார், அவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருமணம் நிச்சயிக்கப்பட்ட 12 நாளில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட பெண் - அதிர்ச்சி சம்பவம் | Samugam Sucide