சூதாட்டத்தில் 80 ஆயிரம் ரூபாய்க்கு குழந்தையை விற்று விளையாடிய தந்தை - பரபரப்பு சம்பவம்

Sold the baby The father played 3 people arrest
3 மாதங்கள் முன்

திருச்சியில் சூதாட்டத்தில் 80 ஆயிரம் ரூபாய்க்கு குழந்தையை விற்ற தந்தை உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி, உறையூர் அருகே பாண்ட மங்கலத்தைச் சேர்ந்தவர் அப்துல் சலாம் (37). இவர் சூதாட்ட பிரியர். இந்நிலையில், பிறந்து 2 மாதமே ஆன ஆண் குழந்தையை சூதாட்டத்தில் ஈடாக வைத்து விளையாடியுள்ளார் அப்துல்சலாம்.

இந்த சூதாட்டத்தில் ஆரோக்கியராஜ் என்பவரிடம் அப்துல் சலாம் தோற்று விட்டார். இதனையடுத்து, குழந்தையை தொட்டியம் அருகே உள்ள கீழடி நிவாச நல்லூரை சேர்ந்த சந்திரகுமார் என்பவர் 80 ஆயிரம் ரூபாய் விலைக்கு வாங்கி இருக்கிறார்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக, உறையூர் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, குழந்தையை வைத்து சூதாடிய அப்துல் சலாம் அதைவிற்ற ஆரோக்கியராஜ், வாங்கிய சந்தன குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்திருக்கிறார்கள். 

சூதாட்டத்தில் 80 ஆயிரம் ரூபாய்க்கு குழந்தையை விற்று விளையாடிய தந்தை - பரபரப்பு சம்பவம்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.