சொந்த தங்கையை கர்ப்பமாக்கிய காமக்கொடூர அண்ணன் : நிலைகுலைந்து போன பெற்றோர் - அதிர்ச்சி சம்பவம்
சொந்த அண்ணனே தங்கையை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையை சேர்ந்த 13 வயது சிறுமி என்பவர் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இச்சிறுமி அடிக்கடி தன்னுடன் படிக்கும் தோழியின் வீட்டிற்கு சென்று வருவது வழக்கம்.
அப்படி அவர், தன் தோழியின் வீட்டிற்கு சென்று அங்கு அதிக நேரம் செலவழித்து வந்துள்ளார். இந்நிலையில் 21 வயது நிரம்பிய தோழியின் அண்ணன் சரவணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தப் பழக்கம் காரணமாக சரவணன், வீட்டிற்கு வரும் சிறுமியிடம், உன்னை திருமணம் செய்து கொள்கின்றேன் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனையடுத்து, சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார்.
தொடர்ச்சியாக பலமுறை அந்தச் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார் சரவணன். தனக்கு நேர்ந்த இந்த சம்பவத்தை வீட்டில் சொல்வதற்கு பயந்து கொண்டிருந்த சிறுமி, இது குறித்து தனது சொந்த அண்ணனிடன் கூறி இருக்கிறார்.
சிறுமி சொன்னதை கேட்டதும் கொந்தளித்த உடன்பிறந்த அண்ணன், தப்பு உன் மேல் தான் இருக்கும் இரு உன்னை வீட்டில் சொல்லிவிடுகிறேன் என்று மிரட்டி இருக்கிறார்.
வேண்டாம் என்று சிறுமி கெஞ்ச அவளின் அறியாமையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு வீட்டில் சொல்லாமல் இருக்கவேண்டும் என்றால் நான் சொல்வதை செய்யவேண்டும் என்று தங்கையிடம் கூறியுள்ளார்.
சொந்த தங்கை என்று கூட பாராமல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக மாணவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து, அச்சிறுமியின் பெற்றோர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு, சிறுமிக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து, மருத்துவமனை சார்பில் மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்காவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இத்தகவலை அறிந்தவுடன் மதுரை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் இந்த சம்பவம் குறித்து விசாரிக்கும்படி அவர் உத்தரவு பிறப்பித்தார்.
அவரது உத்தரவின் பேரில், மகளிர் காவல் நிலைய போலீசார், சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது. சிறுமியின் உடன்பிறந்த அண்ணனும் மற்றும் தோழியின் சகோதரனான சரவணனும் தான் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, சரவணனையும், சிறுமியின் சகோதரனையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்திருக்கிறார்கள். தங்கையையே சொந்த அண்ணன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.