பெற்ற மகளை 7 ஆண்டுகளாக வெளிச்சத்தை பார்க்காமல் இருட்டில் அடைத்த கொடூரத் தந்தை - அதிர்ச்சி சம்பவம்
கர்நாடகாவில் 7 ஆண்டுகளாக வெளிச்சத்தை பார்க்காமல் அறையில் அடைக்கப்பட்டு, இருளில் தவித்த இளம்பெண்ணை மீட்ட அதிகாரிகள் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம், மடிக்கேரி அருகே காளிபீடு கிராமத்தை சேர்ந்தவர் தனுஞ்சயா. இவர் அம்மாநில வருவாய்த்துறையில் பணிபுரிந்து வருகிறார். தனுஞ்சயாவிருக்கு மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி உடல்நிலை குறைவால் உயிரிழந்துவிட்டார். அதிகம் பாசம் கொண்ட தனது தாய் மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் தனுஞ்சயாவின் மூத்த மகள் மனதை பாதித்திருக்கிறது. தாயை இழந்த சோகத்தில் ஒரு கட்டத்தில் தாயை நினைத்து மனநோயாளியாக மாறிவிட்டதாக சொல்லப்படுகிறது.
மூத்த மகள் மனநோயாளியாக மாறிவிட்ட நிலையில் அவரை மங்களூரு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை செய்துள்ளார் தனுஞ்சயா. ஆனாலும் பலன் கிடைக்கவில்லை.
இந்நிலையில், தனுஞ்சயா அவரது மகளை வீட்டுக்கு அருகே உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்து வந்ததாக சொல்லப்படுகிறது. கடந்த 7 ஆண்டுகளாக அந்த பெண்ணை அறையில் சரியான உணவின்றி தவித்து வந்துள்ளாள். இந்நிலையில், அறையில் அடைக்கப்பட்ட இளம்பெண் குறித்து சமூக ஆர்வலர் திம்மையா என்பவருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.
பொதுமக்கள் கொடுத்த ரகசிய தகவலின் பேரில் சமூக ஆர்வலர் திம்மையா மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இந்நிலையில் இதுபற்றி விசாரித்த அதிகாரிகள் போலீஸாரின் உதவியுடன் காளி பீடு கிராமத்திற்கு சென்று மருத்துவர்கள் உதவியுடன் அறையை திறந்து பார்த்துள்ளனர். அப்போது, அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடலில் ஆடைகள் இல்லாமல் தரையில் படுத்து கிடந்த அந்த இளம் பெண்ணை மீட்ட அதிகாரிகள், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தாய் இறந்த சோகத்தில் மனநோயாளியாக மாறிய மகளை குணப்படுத்தாத தந்தை அவரை 7 ஆண்டுகளாக இருளில் அடைத்து சித்ரவதை செய்து வந்துள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.