மகளை மிரட்டிய அப்பாவுக்கு தூக்கு - மூன்றே மாதத்தில் நீதிமன்றம் அதிரடி - குவியும் பாராட்டு

samugam-sexual-abuse-execution
By Nandhini Nov 24, 2021 03:26 AM GMT
Report

மகளை மிரட்டி, மகளை தந்தை பாலியல் வன்கொடுமை செய்ததை பார்த்துவிட்ட தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில், 3 மாதங்களில் தூக்கு தண்டனை விதித்து அதிரடி காட்டியிருக்கிறது பஹ்ராயிச் மாவட்ட நீதிமன்றம். உத்தரபிரதேசம், பஹ்ராயிச் மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயதாகும் அந்த வாலிபருக்கு மனைவி மகள் உண்டு.

மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் தனது 14வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார் அப்பெண்ணின் தந்தை. இதை தாயிடம் சொல்ல பயந்துகொண்டு சொல்லாமல் இருந்துள்ளார் அந்தச் சிறுமி.

இதை தனக்கு சாதகமாகக்கிக் கொண்ட தந்தை, தொடர்ந்து மகளுக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். ஒருநாள் மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தபோது, வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திடீரென்று நுழைந்த மனைவிக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

தந்தையை சொந்த மகளை அப்படி செய்தது பார்த்து ஆத்திரம் அடைந்து சத்தம்போட்டு திட்டி இருக்கிறார். இதனையடுத்து, மகளிடம் விசாரணை நடத்தியபோது, யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவேன் என்று அப்பா மிரட்டினார் அம்மா என்று சொல்லி கதறி அழுதுள்ளார் அச்சிறுமி. உடனே மகளை அழைத்துக் கொண்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் போலீசார் அடைத்தனர். மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் மூன்றே மாதத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி அந்த வாலிபருக்கு தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டு அதிரடி காட்டியிருக்கிறார்.

போக்சோ வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுத்த போலீசாருக்கும், மூன்றே மாதங்களில் விசாரணை முடித்து தீர்ப்பளித்துள்ள நீதிபதிக்கு பாரட்டுக்கள் குவிந்து வருகின்றன. 

மகளை மிரட்டிய அப்பாவுக்கு தூக்கு - மூன்றே மாதத்தில் நீதிமன்றம் அதிரடி - குவியும் பாராட்டு | Samugam Sexual Abuse Execution