சவுக்கடி வாங்கிய பின்... நடனம் ஆடி மகிழ்வித்த சத்தீஸ்கர் முதல்வர்
ராய்ப்பூரில், தீபாவளி பண்டிகையின் ஒரு நிகழ்ச்சியாக நடத்தப்பட்ட கோவர்த்தன் பூஜை விழாவில், சத்தீஸ்கர் முதலமைச்சர் சவுக்கடி வாங்கினார். சவுக்கடி வாங்கிய பின் அவர் நடனம் ஆடி கிராம மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் இங்கு கோவர்த்தன் பூஜை நடத்துவது வழக்கமாகும். ஜான்ஜ்கிரி என்ற கிராமத்தில் நடந்த கோவர்த்தன பூஜையில் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சாட்டையால் அடிக்கும் நிகழ்ச்சியில், முதல்வர் பூபேஷ் பாகேல், தன் வலது கையில் எட்டு சவுக்கடி வாங்கினார். அதன் பின்பு, நடன இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து நடனம் ஆடி கிராம மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.