கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் மகள் 'மாடலிங்கில்' கால் பதித்தார்

samugam-sachin-daughter-modeling
By Nandhini Dec 08, 2021 05:06 AM GMT
Report

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களில் ஒருவர்தான் சச்சின் டெண்டுல்கர். இவருடைய மகள் சாரா டெண்டுல்கர் (24). இவர் மாடலிங் உலகில் கால் பதித்திருக்கிறார்.

புதிய விளம்பர படத்தில் அவர் இடம்பெறும் படம், சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் வசித்து வரும் சச்சின் டெண்டுல்கர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர். இவர் கிரிக்கெட் உலகில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். கிரிக்கெட்டின் கடவுளாக, அவருடைய ரசிகர்கள் இன்று வரை அவரை கொண்டாடி வருகிறார்கள்.

புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டல்கர், பல விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார். அவருடைய மகன், அர்ஜூன் தந்தையைப் போலவே கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கெனவே மும்பை அணிக்காக பல போட்டிகளில் அவர் விளையாடி வருகிறார். ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியிலும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார்.

இந்நிலையில் சச்சின், டாக்டர் அஞ்சலி தம்பதியின் மூத்த மகள் சாரா டெண்டுல்கர். இவர் மாடலிங் உலகில் கால் பதித்திருக்கிறார். பிரபல ஆடைநிறுவனத்தின் விளம்பரம் ஒன்றில் அவர் நடித்துள்ளார். புகழ்பெற்ற மாடல்களான பனிதா சாந்து, தானியா ஷரோப் ஆகியோருடன் நடித்துள்ள அந்த விளம்பரம் தொடர்பான படங்களை, சமூகவலைதளத்தில் சாரா வெளியிட்டிருக்கிறார்.

லண்டன் பல்கலை ஒன்றில் மருத்துவத்தில் பட்டம் பெற்றுள்ள சாரா, ஏற்கனவே பலவித கவர்ச்சி ஆடைகளுடன் சமூகவலைதளத்தில் படங்களை வெளியிட்டு, பலருடைய பாராட்டையும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் மகள்