பிரபல மூத்த எழுத்தாளர் ‘வாத்தியார்’ ஆர்.எஸ்.ஜேக்கப் உயிரிழந்தார்
திருநெல்வேலியை சேர்ந்த மூத்த எழுத்தாளர் வாத்தியார் R.S.ஜேக்கப், நேற்று இரவு 11 மணிக்கு உடல் நலக்குறைவால் காலமானார்.
நெல்லை சதி வழக்கில் கைதான 93 பேரில், ஆர்.எஸ்.ஜேக்கப்பும் ஒருவராவார். இவர் சதி வழக்கில் இவருடன் சிறைவாசம் பெற்றவர்களில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணுவும் ஒருவர்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பல கதைகள் எழுதியுள்ளார். அவர்களுக்காக பல்வேறு கட்டங்களில் போராடியுள்ளார் ஆர்.எஸ்.ஜேக்கப். இவர் ‘வாத்தியார்’ என்ற நாவல் மூலம் மிகவும் பிரபலமானார். அதனாலேயே இவரை ‘வாத்தியார்’ ஜேக்கப் என்று மக்கள் அழைத்து வந்தனர்.
இந்நிலையில், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த வாத்தியார் R.S.ஜேக்கப் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இன்று மாலை 4 மணிக்கு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.