புஷ்அப் செய்து கின்னஸ் சாதனை படைத்த இளைஞர் - குவியும் வாழ்த்துக்கள்

Youth Guinness World Record Manipur pushup
By Nandhini Jan 24, 2022 07:50 AM GMT
Report

மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த 24 வயது இளைஞரான தௌனோஜம் நிரஞ்சாய் சிங், ஒரு நிமிடத்தில் விரல் நுனியில் அதிக புஷ்-அப் செய்து புதிய கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்.

முன்னதாக இரண்டு முறை கின்னஸ் சாதனை படைத்த நிரஞ்சாய் சிங் ஒரு நிமிடத்தில் 105 புஷ்-அப்கள் என்ற தனது முந்தைய சாதனையை தானே முறியடித்திருக்கிறார்.

விரல் நுனியில் 109 புஷ்-அப்கள் எடுத்து புதிய சாதனையை படைத்திருக்கிறார் நிரஞ்சாய். தற்போது இவருக்கு சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் பலர் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.   

புஷ்அப் செய்து கின்னஸ் சாதனை படைத்த இளைஞர் - குவியும் வாழ்த்துக்கள் | Samugam Pushup Manipur Youth World Record