580 வருடங்களுக்கு பின் இன்று நிகழப்போகும் பகுதி சந்திர கிரகணம் - முக்கிய நிகழ்வு

samugam-part-time-lunar-eclipse
By Nandhini Nov 19, 2021 04:43 AM GMT
Report

580 வருடங்களுக்கு பிறகு இன்று பகுதி நேர சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது. சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வருவதை தான் சந்திர கிரகணமாகும்.

இந்நிகழ்வு பௌர்ணமி அன்று நிகழும். சூரியனின் ஒளி சந்திரன் மீது முழுமையாக விழுந்தால் அது முழு சந்திர கிரகணம் என்று அழைக்கப்படும். சந்திரனின் ஒரு பகுதியை மறைத்தால் அது பகுதிநேர சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகின்றது.

இந்நிலையில், இன்று பகுதி நேர சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது. இந்த சந்திர கிரகணம் 580 வருடங்களுக்கு பின்னர் நிகழ உள்ளது. இந்திய நேரப்படி, பகுதி நேர சந்திர கிரகணம் காலை 11:32:09 மணிக்கு தொடங்கி மாலை 17:33:40 (5.33) மணிக்கு முடிவடைய இருக்கிறது. முழுமையாக 6 மணி நேரம் 2 நிமிடங்கள் இந்த கிரகணம் நிகழ உள்ளது.

இதற்கு முன் மிக நீண்ட சந்திர கிரகணம் 1440ம் ஆண்டு நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதன் பிறகு மீண்டும் இது போன்ற சந்திர கிரகணம் வரும் 2669ம் ஆண்டு தான் நிகழும்.

மேலும், இன்று நிகழவிருக்கும் இந்த சந்திரகிரகணம் ஆசியாவில் உள்ள சில பகுதிகளிலும், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இடங்களிலும் தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

580 வருடங்களுக்கு பின் இன்று நிகழப்போகும் பகுதி சந்திர கிரகணம் - முக்கிய நிகழ்வு | Samugam Part Time Lunar Eclipse