ஆன்லை வகுப்பில் வெடித்துச் சிதறிய செல்போன் - 5ம் வகுப்பு மாணவன் பரிதாப பலி
செல்போனை சார்ஜில் போட்டுக்கொண்டே பேசுவதால் வெடிக்கும் அபாயம் அடிக்கடி நடந்து கொண்டுதான் வருகிறது. இதனால், உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
வியட்நாம் நாட்டில் நாம்டென் மாவட்டத்தில் 5ம் வகுப்பு மாணவர் ஒருவர் கடந்த 14ம் தேதியன்று ஆன்லைன் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது செல்போனில் சார்ஜ் தீர்ந்து விட்டது.
இதனால், செல்போனை சார்ஜில் போட்டபடியே காதில் இயர் போனை மாட்டிக் கொண்டு ஆன்லைன் வகுப்பில் பங்கேற்றிருக்கிறார். இதனால், செல்போன் பேட்டரி அதிகமாக சூடாகி வெடித்துச் சிதறியது.
இச்சம்பவத்தில், மாணவரின் உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. வெடித்த சத்தத்தை கேட்டு ஓடிவந்த பெற்றோர் அதிர்ந்து போய் மகனை மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். மருத்துவமனையில் மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.