‘விழித்துக் கொள்ளுங்கள்.. தமிழ்நாட்டை இந்துக்கள் இழந்துவிட்டீர்கள்..’ - பகீர் கிளப்பி சிக்கலில் சிக்கிய நித்யானந்தா
இதுதான் உண்மை, அடுத்த தலைமுறை இந்துக்களுக்கு தான் சிக்கல் வரும் என்று முட்டாள்தனமாக கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் உங்கள் மிச்சம் இருக்கின்ற, எச்சம் இருக்கின்ற, சொச்சம் இருக்கின்ற கலாச்சார அடையாளங்கள் அழிக்கப்படும். நீங்கள் நன்றாக புரிந்து கொள்ளுங்கள், நமது கலாச்சாரத்தினுடைய, நமது முன்னோர்களுடைய சாதனை, பெருமை, அந்த சாதனை, பெருமை, வாழ்க்கை முறைக்கு காரணமாக இருந்த உந்து சக்தி இந்து மதம்.
இந்துக்கள் தமிழ்நாட்டை இழந்துவிட்டார்கள் என்றும், அடுத்த தலைமுறையில் அல்ல இந்த தலைமுறையிலேயே இந்து மதம் தமிழ் நாட்டில் மொத்தமாக துடைத்தெறிய படும் என்றும் நித்யானந்தா எச்சரித்திருக்கிறார்.
மேலும், தனது வீடியோவில் இந்து கோவில்கள் எடுக்கப்பட்ட புகைப்படங்களை காட்டி இந்து மதம் அழிக்கப்பட்டு வருகிறது, இந்துக்கள் தமிழ் நாட்டை இழந்து விட்டார்கள், இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இந்து மதம் கலாச்சாரம் துடைத்து எறியப்படும் என்று கூறியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ -