புத்தாண்டு கொண்டாட கடற்கரைக்கு வருபவர்களுக்கு இந்த சான்றிதழ் அவசியமாம்!
புதுச்சேரி கடற்கரைக்கு வருபவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும் என்றும், 2 தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே கடற்கரையில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
புதுச்சேரி அரசு புதிய கட்டுப்பாடுகளுடன், புத்தாண்டு கொண்டாட அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து, இன்று முதல் புதுச்சேரி கடற்கரையில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன.
அந்த வகையில், இன்று முதல் புதுச்சேரி கடற்கரைக்கு வருபவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும் என்றும், 2 தடுப்பூசி போட்டவர்கள்மட்டுமே கடற்கரையில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், கடற்கரைக்கு வருபவர்கள் தடுப்பூசி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி, இன்று காலை முதல் போலீசார் புதுச்சேரி கடற்கரை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.