போய்... உங்க வேலையை மட்டும் பாருங்க... - நடிகையோடு டேட்டிங் செல்லும் நாக சைதன்யா? - கடுப்பில் சமந்தா

Samantha Naga Chaitanya
By Nandhini Jun 21, 2022 07:16 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தெலுங்கு முன்னணி நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் விவகாரத்து செய்து பிரிந்து செல்வதாக சமூகவலைத்தளங்களில் அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பைப் பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும், சினிமாத்துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, தன்னுடைய பெயருக்கு பின்னால் இருக்கும் கணவர் பெயரான நாகசைதன்யாவை அதிரடியாக நீக்கினார் நடிகை சமந்தா.

இதன் பிறகு, இவர்கள் இருவரும் தன்னுடைய வேலையில் மிகவும் பிஸியாக இறங்கி செயல்படத் தொடங்கினர்.

திருமண சேலையை திருப்பி கொடுத்த சமந்தா

இதற்கிடையில், திருமணத்திற்கு நாக சைதன்யாவின் குடும்பத்தினர் வாங்கி கொடுத்த சேலையையும் நடிகை சமந்தா அவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டதாக தகவல்கள் வெளியானது. நாக சைதன்யாவின் சம்பந்தப்பட்ட எதுவும் தன்னிடம் இருக்க வேண்டாம் என்று முடிவெடுத்த சமந்தா திருமண சேலைகளை திருப்பி கொடுத்ததாக சொல்லப்பட்டது.

போய்... உங்க வேலையை மட்டும் பாருங்க... - நடிகையோடு டேட்டிங் செல்லும் நாக சைதன்யா? - கடுப்பில் சமந்தா | Samugam Nagachaitanya

நடிகையோடு காதலில் விழுந்த நாகசைதன்யா?

இந்நிலையில், நடிகர் நாக சைதன்யா தெலுங்கு நடிகை ஷோபிதாவை காதலித்து வருவதாகவும், இருவரும் டேட்டிங் சென்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வதந்தியெல்லாம் சமந்தா தரப்பிலிருந்து பரப்பப்பட்டு வருகிறது என்றும், நாக சைதன்யாவின் புகழ் கெட்டுப்போவதற்காக இவ்வாறு செய்து வருவதாகவும் நாகசைதன்யாவின் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

போய்... உங்க வேலையை மட்டும் பாருங்க... - நடிகையோடு டேட்டிங் செல்லும் நாக சைதன்யா? - கடுப்பில் சமந்தா | Samugam Nagachaitanya

கோபத்தில் சமந்தா டுவிட்

இதைப் பார்த்து கோபமான நடிகை சமந்தா, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் சமந்தா ரசிகர்களை கடுமையாக சாடியிருக்கிறார்.

அந்த பதிவில், “பெண்ணைப் பற்றிய வதந்திகள் எல்லாம் உண்மையாகவே இருக்கும். ஆணைப் பற்றிய வதந்திகளை பெண் தான் பரப்புகிறாள். என்னது இதெல்லாம். சம்பந்தப்பட்ட நாங்களே இதில் இருந்து கடந்து சென்றுவிட்டோம். நீங்களும் அதை செய்ய வேண்டும். உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். உங்கள் குடும்பத்தை பாருங்கள்” என பதிவிட்டுள்ளார்.

சமந்தாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். இதுபோன்ற வதந்திகளுக்கு பதிலளிக்காமல் அவற்றை தவிர்த்து விடுமாறு சமந்தாவிற்கு அவரது ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.